India

முதலில் பூனைக்கடி.. அடுத்து நாய்க்கடி: கேரள பெண்ணுக்கு அடுத்தடுத்து நடந்த துயரம்!

கேரள மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகத் தெருநாய் கடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒருவாரத்தில் காசர்கோடு பகுதியில் மட்டும் 10 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் கடந்த 12ம் தேதி கோழிக்கோடு பகுதியில் சிறுவன் ஒருவனை நாய்க் கடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தெருநாய்களைப் பிடிக்கக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தெரு நாய்களைப் பிடித்துத் தருவோர்களுக்கு ஒவ்வொரு நாய்க்கும் தலா ரூ.500 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பூனை கடிக்காகத் தடுப்பூசி செலுத்தச் சென்ற பெண்ணை தெருநாய் ஒன்று கடித்துள்ளது மீண்டும் கேரள மக்களைப் பீதியடைய வைத்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அபர்னா. இவர் பூனை கடித்துள்ளது.

இதையடுத்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த நாய் ஒன்று அவரை கடித்துள்ளது. பின்னர் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு நாய்க் கடிக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் தெருநாய்களின் தொல்லை தினமும் அதிகரித்து வருவதால் விரைந்து அரசு தடுப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: 'வெறும் உப்பு கலந்த சாதம்'.. மீண்டும் வெளிச்சத்திற்கு வந்த யோகி அரசின் மதிய உணவு திட்டத்தின் அவலம்!