India
"மனிதனை கடித்தால் விட்டு விடுவோம்.. ஆனா பசுவை கடித்தால்.." -பிட்புல் நாய்க்கு தடை விதித்த உ.பி நகராட்சி!
பிட்புல் நாய் - நாய் வகைகளிலே மிகவும் ஆபத்தான விலங்காகும். முன் காலத்தில் பிட்புல் நாயை வேட்டையாட பயன்படுத்த பட்டதால், இதன் குணம் மிகவும் கொடூரமாக இருக்கும். எனவே இந்த வகை நாயை இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகளில் வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியா பிட்புல் நாய் வளர்க்க தடையில்லை என்பதால் பல்வேறு மாநிலங்களில் இந்த நாய்களை வீட்டில் வளர்த்து வருகின்றனர்.
'பாம்புக்கு பால் வார்த்தாலும், அது விஷத்தை கக்கும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த வகை நாய்களை எவ்வளவு பாசமாக வளர்த்தாலும் அதன் கொடூர குணத்தை ஒரு காட்டத்தான் செய்யும். அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் மகன் வளர்த்த பிட்புல் நாய், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வயதான தாயை கடித்து கொன்றுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த நாயை மகன் லக்னோ மாநகராட்சியில் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து அதே மாதத்தில் பஞ்சாபில் பிட்புல் ரக நாய் ஒன்று சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவனின் காதலி கடித்து துப்பியுள்ளது. இதுவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் கடந்த 9-ம் தேதி இதே உத்தரபிரசேதத்தில் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை, பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை உரிமையாளர் வைத்திருந்த பிட்புல் நாய் ஒன்று கொடூரமாக கடித்ததில் சிறுவனுக்குக் 150 தையல்கள் போடபட்டுள்ளது. அதோடு இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதோடு கடந்த 4 நாட்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சர்சய்யா காட் பகுதியில் பசுவின் தாடையை பிட்புல் நாய் ஒன்று கடித்துள்ளது. இதைக் கண்ட பிட்புல் நாயின் உரிமையாளர் உள்ளிட்டோர் பசுவை காப்பாற்ற முயன்றனர்.
மேலும் அங்கிருந்த 3 பேர் கட்டை உள்ளிட்ட பொருள்களால் நாயை தாக்கியும், நாயை இழுக்க பார்த்த நிலையிலும் கூட அந்த பிட்புல் நாய் தனது பிடியை விடவில்லை. பின்னர் இறுதியாக பிட்புல் நாய் தனது பிடியை விடுத்துள்ளது. இதனை மேல் மாடியில் இருந்து வீடியோ எடுத்த சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ பெரும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கான்பூர் பகுதியில் பிட்புல் நாய் வளர்க்க தடை விதித்து கான்பூர் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதோடு பிட்புல் நாய் மட்டுமல்ல ராட்வீலர் நாய் இனங்களையும் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அந்த பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!