India
சூனியம் வைத்ததாக சந்தேகம்..அண்டை வீட்டாரை தாக்கி மனித மலம் திங்க வைத்த கும்பல்..ஜார்கண்ட்டில் அதிர்ச்சி!
ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா பகுதியில் அஸ்வரி என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடும்பத்தினர் வீட்டின் அருகே மற்றொரு குடும்பத்தினர் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இரு குடும்பத்தினருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ரவி குடும்பத்தினர், தங்களுக்கு சூனியம் வைத்துள்ளதாக கூறி மற்ற குடும்பத்தினர் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் ரவி குடும்பத்தினர் வீட்டில் இருந்த மூன்று பெண்கள் உட்பட அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அதோடு ஒரு இரும்பு கம்பியை நல்லா சூடேற்றி அதனை வைத்து அனைவர் மீதும் சூடு வைத்துள்ளனர். இதையெல்லாம் விட கொடுமையாக அனைவரயும் மனித மலத்தை சாப்பிட வைத்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தங்களை தாக்கியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "சூனியம் வைத்ததாக கூறி ஒரு குடும்பத்தினர் மற்ற குடும்பத்தினர் மீது இரும்பு கம்பியை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் மனிதநேயமற்ற செயலாக அவர்கள் அனைவர் வாயில் சிறுநீரை ஊற்றி, மனித கழிவை உண்ண வைத்துள்ளார்கள்.
தற்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், விசாரணை நடத்தி குற்றவாளிகள் ஆறு பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளோம். தற்போது அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினர்.
சூனியம் வைத்ததாக கூறி ஒரு குடும்பத்தினர் மற்ற குடும்ப பெண்கள் உட்பட 4 பேரை மனித மலத்தை சாப்பிட வைத்த கொடூர சம்பவம் ஜார்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?