India
ஆற்றில் மிதந்து வந்த 500 ரூபாய் நோட்டுகள்.. பணக்காரராவேன் என கருதிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
கேரளத்தில் அடிக்கடி லாட்டரியில் வென்றவரின் பட்டியல் வெளிவந்து ஆச்சரியத்தை அளிக்கும். அதே நேரத்தில் இன்னொரு ஆச்சரிய நிகழ்வும் நடந்துள்ளது. மனதார தான் பணக்காரர் ஆகிவிட்டோம் என்று கருதிய ஒரு நபர் அடுத்த நிமிடமே பெரும் ஏமாற்றத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கேரளத்தில் ஆற்றிங்கல் பகுதியில் ஆற்றில் ஒருவர் குளித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது இரண்டு பெரிய தெர்மோகோல் பெட்டிகள் ஆற்றில் மிதந்து வந்துள்ளன. அதைப் பார்த்த அந்த நபர் உடனடியாக அந்த பெட்டிகளை எடுத்து அதனை திறந்து பார்த்துள்ளார்.
அவருக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்துள்ளது. அதில் கட்டு கட்டாக ஏராளமான 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது. இதனால் தான் பெரும் பணக்காரர் ஆகிவிடுவோம் என்று கருதிய அந்த நபருக்கு அடுத்த நிமிடமே பெரும் அதிர்ச்சியும் காத்திருந்துள்ளது.
அந்த 500 ரூபாய் நோட்டுகளை அவர் கூர்ந்து கவனித்த போது அவை சினிமா ஷூட்டிங் பயன்பாட்டிற்காக அச்சிடப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள் என்று அவருக்கு தெரியவந்துள்ளது. அந்த ரூபாய் நோட்டின் ஒரு பகுதியில் 'Only For Shooting Purpose' என எழுதியிருந்ததை கண்டு மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார். அதன் பின்னர் இது தொடர்பாக காவல்நிலையத்துக்கு தகவல் ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?