India
விடுதி பணிப்பெண்ணை பாலியல் தொழிலுக்கு அழைத்த பா.ஜ.க தலைவரின் மகன் - கொலை செய்து ஆற்றில் வீசிய கொடூரம்!
உத்தரகாண்ட் மாநிலம் ரஷிகேஷில் பா.ஜ.க தலைவரும் முன்னாள் அமைச்சராகவும் இருந்த வினோத் ஆர்யா அப்பகுதியில் ரிசார்ட் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். அந்த ரிசார்ட்டை அவரின் மகன் புல்கித் ஆர்யா நிர்வகித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்தமாதம் இவரின் ரிசார்ட்டுக்கு பவுரி கர்வால் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் வரவேற்பாளராக சேர்ந்துள்ளார். இதனிடையே கடந்த வாரம் அப்பெண் திடீரென மாயமாகியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை மகளை எங்கு தேடியும் கிடைக்காததால்,காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட ரிசார்ட் ஆளும் கட்சி பா.ஜ.க நிர்வாகியின் ரிசார்ட் என்பதால் வழக்கை எடுக்காமல் போலிஸார் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து பெண்ணின் தந்தை இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் வெளியான கடும் கண்டனங்களுக்கு பிறகு போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலிஸார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணிடன், அதிக பணம் தருவதாகவும், விடுதிக்கு வரும் நபர்களை கவணித்துக்கொண்டால் கூடுதல் பணம் தருவதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த புல்கித் ஆர்யா மற்றும் ரிசார்ட் மேலாளர் சவுரப் பாஸ்கர், ஊழியர் அங்கித் குப்தா ஆகியோர் குடிபோதையில் ரிசார்ட்டுக்குச் சென்று அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு ஒப்புக்கொள்ளும்படி மிரட்டியுள்ளனர்.
இதனால் அந்த பெண் மறுப்புத் தெரிவித்து கூச்சலிட்டுள்ளார் இதனால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை மூன்று பெரும் அடித்து கொலை செய்துவிட்டு உடலை அருகில் இருந்த கால்வாயில் தூக்கிப்போட்டுவிட்டு எதுவும் தெரியாததுபோல் நடித்துள்ளனர்.
மேலும் பல ஆதாரங்களை அழிக்க முயற்சி செய்தும் மூவரும் போலிஸாரிடம் மாட்டிக்கொண்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலிஸார் மூன்று பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் பல்வேறு தரப்பினருக் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், வினோத் ஆர்யாவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!