India
பசு மாட்டை கடித்து குதறிய பிட்புல் நாய்.. மூன்று மாதத்தில் 4-வது சம்பவம்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி !
உத்தரபிரதேசத்தில் கடந்த ஜூலை மாதம் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மகன் வளர்த்து வந்த பிட்புல் நாய் கடித்து கொன்றுள்ள சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அதே மாதம் இறுதியில் பஞ்சாபில் பிட்புல் நாய் சிறுவனின் காதை கடித்து துப்பிய நிகழ்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த 11வயது சிறுவனை பூங்காவில் வைத்து பிட்புல் ரக நாய் கடித்து குதறியது. இந்த தாக்குதலில் அந்த சிறுவனுக்கு அவரது முகம் உட்பட உடல் முழுவதும் 150 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சர்சய்யா காட் பகுதியில் பசுவின் தாடையை பிட்புல் நாய் ஒன்று கடித்துள்ளது. இதைக் கண்ட பிட்புல் நாயின் உரிமையாளர் உள்ளிட்டோர் பசுவை காப்பாற்ற முயன்றனர்.
அங்கிருந்த 3 பேர் கட்டை உள்ளிட்ட பொருள்களால் நாயை தாக்கியும், நாயை இழுக்க பார்த்த நிலையிலும் கூட அந்த பிட்புல் நாய் தனது பிடியை விடவில்லை. பின்னர் இறுதியாக பிட்புல் நாய் தனது பிடியை விடுத்துள்ளது. இதனை மேல் மாடியில் இருந்து வீடியோ எடுத்த சிலர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
Also Read
-
அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு துணைபோகும் ஒன்றிய பாஜக அரசு... திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் !
-
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம்... சென்னையில் எந்தெந்த இடங்கள் வழியாக கொண்டுசெல்லலாம்... விவரம் உள்ளே !
-
அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்படும் தமிழ்நாடு... ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க கி.வீரமணி கோரிக்கை !
-
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு... தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஆணையத் தலைவராக நியமனம் !
-
தமிழ்நாட்டில் 1 லட்சம் பேருக்கு 194 டாக்டர்கள் : இந்திய சராசரியை விட இரு மடங்கு அதிகம் பெற்று சாதனை!