India
வயலில் வேலை செய்த பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 34 நாட்கள் தொடர் சித்திரவதை : பகீர் சம்பவம்!
ஹரியான மாநிலம் நூஹ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் (45) ஜூலை 27ம் தேதி வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக காரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணிடம் வழிகேட்பது போல் பேச்சுக்கொடுத்து கடத்தி உள்ளனர்.
பின்னர் காரில் ராஜஸ்தான் மாநிலத்துக்கு அருகே உள்ள கிராமத்திற்கு அழைத்துச் சென்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, மூன்று பேரும் அந்த பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது பெண்ணை வன்கொடுமை செய்து நிர்வாணமாக வீடியோ எடுத்து, அதனை பெண்ணின் பெற்றோருக்கு அனுப்பி ரூ.3 லட்சம் கொடுத்தால் பெண்ணை விட்டுவிடுவதாகவும், இல்லையெனில் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்துபோன பெண்ணின் பெற்றோர், செப்டம்பர் 1ம் தேதி ரூ.3 லட்சம் கொடுத்து அந்த பெண்ணை மீட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!