India
தொழிற்சாலையில் தீ விபத்து.. மகனுக்கு பிறந்த நாள் கொண்டாட இருந்த நிலையில் தந்தை - மகனுக்கு நேர்ந்த துயரம்!
ஆந்திரா மாநிலம், சித்தூரில் காகித தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பொளுந்து விட்டு எரிந்து பரவியுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்கள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் பாஸ்கர், அவரது மகன் டில்லிபாபு மற்றும் பாலாஜி ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த டில்லிபாபுவுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து போலிஸார் வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !