India
குழந்தை பிறக்காத சோகம்.. ஆத்திரத்தில் பக்கத்துவீட்டு பெண்ணை கொலை செய்த கணவர்..வெளிவந்த அதிர்ச்சி பின்னணி!
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள போதி கிராமத்தில் வசிப்பவர் உமேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். ஆனால், இந்த சம்பதிக்கு குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
இந்த தம்பதியின் பக்கத்து வீட்டில் மற்றொரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். மேலும், இவரின் இந்த தம்பதியினர் அடிக்கடி பூஜை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், பக்கத்து வீட்டுக்காரர் அடிக்கடி பூஜை செய்வதால்தான் தங்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வருகிறது என உமேஷ் அடிக்கடி கூறி வந்தார். அந்த தம்பதி தங்களுக்கு எதிராக பூஜை செய்வதாகவும் தனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லாமல் போக காரணமும் இந்த மாந்திரிகம்தான் என கருதி வந்துள்ளார்.
இந்த நிலையில், தன் குடும்பத்தின் இந்த நிலைமைக்கு காரணமான பக்கத்து வீட்டுப் குடும்பத்தில் உள்ள கவுசிலியாவை கொலை செய்ய உமேஷ் முடிவெடுத்துள்ளார். அதன்படி வீட்டு பக்கத்தில் இருந்த குளத்தில் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்த கவுசிலியாவை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவஇடத்திலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அந்த பெண்ணின் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், இது குறித்து போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் தலைமறைவான உமேஷை தேடி கைது செய்தனர். அவரின் வாக்குமூலத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !