India
மரத்தில் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சிறுமி.. கொலையா? உத்தரபிரதேசத்தில் தொடரும் கொடுமை !
உத்தரபிரதேச மாநிலம் சான்ட் கபீர் பகுதியில் ராம்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் வசித்து வந்த 18 வயது இளைஞர் ஒருவரும் 15 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வயல்வெளி பகுதிக்கு சென்ற அந்த பகுதி மக்கள் சிலர், இவர்கள் இரண்டு பெரும் மரத்தில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டனர்.
இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே ஊர் பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் காதலர்கள் என்று தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே சம்பவம் இடத்திற்கு வந்த காதலர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறினர். பின்னர் இருவரின் மொபைல் போன்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதோடு அவர்கள் குடும்பத்தாரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக லக்கிம்பூர் கேரி பகுதியிலும் இதே போன்று பட்டியலின சகோதரிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். அதற்கு முன்பாக பட்டியலினத்தை சேர்ந்த 16 வயது சிறுமி இதே உத்தரபிரதேச மாநிலத்தின் வேறொரு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மெட்ரோ விவகாரம் : பதிலே இல்லாமல் பதில் அளித்துள்ள ஒன்றிய அமைச்சர்.. - சு.வெ எம்.பி. விமர்சனம்!
-
“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!