India
குளிப்பதை வீடியோ எடுத்த கேன்டீன் ஊழியர்.. IIT விடுதியில் மாணவிக்கு நேர்ந்த சோகம் - மும்பையில் அதிர்ச்சி !
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஐஐடி-யில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாணவர்கள் படித்து வருகின்றனர். நெடுந்தூரத்தில் இருந்து கல்வி கற்க வரும் மாணவ - மாணவியருக்கு அங்கேயே விடுதி வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு விடுதியில் தங்கியிருக்கும் மாணவி ஒருவர் குளிக்க குளியல் அறைக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கே இருந்த ஒரு ஜன்னல் வழியாக யாரோ ஒரு நபர் மொபைல் போனை வைத்து வீடியோ எடுத்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவி சென்று பார்த்த போது, அது ஐஐடி-யில் உள்ள கேன்டீன் ஊழியர் பிந்து என்று தெரியவந்தது.
இதையடுத்து மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார். இவரது சத்தத்தை கேட்டு ஓடி வந்த சக மாணவிகள் விசாரிக்கையில் தன்னை யாரோ வீடியோ எடுத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து மாணவிகள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது பிந்து தப்பித்து ஓட முயற்சி செய்தபோது மாணவிகள் அவரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
மேலும் அவரது செல்போனையும் பறிமுதல் செய்து சோதனையிட்டனர். பிறகு இதுகுறித்து காவல்துறைக்கு தகவலும் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் உடனே அவரை கைது செய்து மாணவிகளிடம் இருந்து பிந்துவின் செல்போனையும் வாங்கி சோதனை செய்தனர். அப்போது அவரது மொபைல் போனில் சில விநாடிகள் மட்டுமே இருக்கக்கூடிய வீடியோ ஒன்று இருந்துள்ளது; அதுவும் இருட்டாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து காவல்துறையினர் பிந்துவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். மேலும் அவரது மொபைல் போனில் வேறு வீடியோ எதுவும் அழிக்க பட்டுள்ளதா என்பது குறித்தும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஐஐடி நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், "இந்த சம்பவம் தெரிந்தவுடன் அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை விடுதியில் இருக்கும் கேன்டீனை இரவு நேரத்தில் ஆண் ஊழியர்கள் தான் கவனித்து வந்தார்கள். இனி இரவு நேரங்களில் அங்கே பெண் ஊழியர்கள் இருப்பார்கள்' என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !