India
“அடித்து துன்புறுத்துகிறார்..” : கேரளாவில் வரதட்சனை கொடுமையால் மீண்டும் ஒரு இளம் பெண் தற்கொலை !
கேரளாவில் நடைபெற்ற விஸ்மயா வரதட்சனை வழக்கு நாட்டையே உலுக்கிய நிலையில், அம்மாநிலத்தில் மீண்டும் ஒரு பெண் வரதட்சனையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா. வழக்கறிஞரான இவர் அதேபகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கணணன் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.
வரதட்சனை கூடுதலாக திருமணம் செய்துகொண்ட நிலையில், கண்ணன் அடிக்கடி ஐஸ்வர்யாவை அடித்து துண்புறுத்தி வரதட்சனைக் கேட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து சம்பவம் அறிந்துவந்த போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தியதில், கடிதம் ஒன்று சிக்கியது. அதில் கணவர் கண்ணன் வரதட்சனைக் கேட்டு அடித்து துண்புறுத்துவதாகவும், தகாத வார்த்தைகளில் பேசி அடிப்பதாகவும் சம்பள பணம் மற்றும் தாலியை பறித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் தற்கொலைக்கு கணவர் கண்ணன் தான் காரணம் என எழுதி வைத்திருந்தார். இதனையடுத்து போலிஸார் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் வரதட்சனை கொடுமைக்கு முடிவு கட்ட அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?