India

கேரளாவை அச்சுறுத்தும் தெருநாய்கள்.. சாலையில் நடக்கவே அச்சப்படும் மக்கள்: அங்கு நடப்பது என்ன?

கேரள மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாகத் தெருநாய் கடித்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். பலபேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த ஒருவாரத்தில் காசர்கோடு பகுதியில் மட்டும் 10 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடந்த 12ம் தேதி கோழிக்கோடு பகுதியில் சிறுவன் ஒருவனை நாய்க் கடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு ஒருநாள் முன்பு 2 குழந்தைகள் உட்பட 5 பேரை நாய் கடித்துள்ளது. இதையடுத்து நாய்க் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மருத்து செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீர் என்பவர் கையில் துப்பாக்கி ஏந்திக் கொண்டு சிறுவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்துப் பேசிய சமீர், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் சிறுவர்களை நாய் தாக்குதல்களில் இருந்து காப்பாற்று துப்பாக்கி ஏந்தி அழைத்துச் சென்றேன் என தெரிவித்துள்ளார். இதையடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Also Read: பெற்றோர்களின் மூட நம்பிக்கை.. பாம்பு கடித்த சிறுமிகளை சாமியாரிடம் கூட்டிச் சென்றதால் நடந்த விபரீதம்!