India
சமையலறையில் கஞ்சா செடி.. வசமாய் சிக்கிய பெண் இன்ஜினியர் பட்டதாரிகள்.. கேரளாவில் அதிர்ச்சி !
கேரள மாநிலம் திருக்காக்கரை என்ற பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் அபர்ணா ரெஜி என்ற இளம்பெண் ஒருவரும், ஆலன் ராஜூ என்ற இளைஞர் ஒருவரும் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்ப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்பேரில் அவர்கள் இவர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். வீடு முழுக்க சோதனை நடத்தியும் எதுவும் கிடைக்காததால் எதற்கும் சமையலறையிலும் சோதனை செய்வோம் என்று எண்ணி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கே சுமார் ஒன்றரை அடி உயரத்தில் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா செடி ஒன்று கண்டனர். அந்த கஞ்சா செடிக்கு என்றே பிரத்யேகமாக LED விளக்குகளும், எக்ஸாஸ்ட் ஃபேனும் வைத்து பராமரிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த செடியை மீட்ட அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் இந்த குடியிருப்பிற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குடியேறியதும், அவர்கள் இரண்டு பெரும் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள் என்றும் தெரியவந்தது. பின்னர் அவர்களை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமையலறையில் வைத்து கஞ்சா செடி வளர்த்து வந்த இரண்டு பட்டதாரிகளின் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.165 கோடியில் கட்டப்பட்டு வரும் 700 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்! : உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!
-
“நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும்!” : SIR குறித்து எச்சரித்த முரசொலி தலையங்கம்!
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா