India
ம.பி : பள்ளி பேருந்தில் வைத்து 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. தரைமட்டமான ஓட்டுநரின் வீடு !
மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 3 வயதுடைய குழந்தை ஒன்று படித்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி சிறுமி பள்ளி பேருந்தில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது உடை மாற்றப்பட்டதை கண்ட பெற்றோர், இது குறித்து பள்ளி மற்றும் ஆசிரியைக்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் மாற்றவில்லை என்று தெரிவிக்கவே அவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.
மேலும் அந்த சிறுமி தனக்கு வயிறு வலி என்று தெரிவிக்கவே உடனே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கவுன்சிலிங் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தனக்கு பள்ளி பேருந்துக்குள் வைத்து ஓட்டுநர் செய்த கொடுமையை அந்த சிறுமி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கவே, அவர்கள் முன்னிலையில் பேருந்து ஓட்டுநரை சிறுமி அடையாளம் காண்பித்துள்ளார்.
இதையடுத்து சிறுமி என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்த அப்பள்ளி பேருந்து ஓட்டுநர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக பெண் உதவியாளர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். அப்போது அவரது வீடு சட்டத்திற்கு விரோதமாக கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில் சிறுமியை வன்கொடுமை செய்த ஓட்டுநரின் சட்ட விரோதமாக போபாலின் ஷாபுரா பகுதியில் உள்ள கட்டப்பட்ட வீட்டை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினார். இந்த விவகாரம் அம்மாநிலத்தில் மெம்மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!