India
வாழைப்பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்.. திண்டுக்கல்லில் சோகம் !
திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாகுல் ஹமீது. இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் வழக்கம்போல் அந்த குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். சாப்பிட்டு விட்டு அந்த குழந்தைக்கு சாப்பிட வாழைப்பழமும் கொடுத்துள்ளார்.
அந்த பழத்தை சாப்பிட்ட குழந்தைக்கு அது தொண்டைக் குழியில் சிக்கிக் கொண்டது. பின்னர் அதற்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், அவர்கள் விரைந்து வந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாழைப்பழம் சாப்பிட்டு ஒன்றரை வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "குழந்தைகளுக்கு 2 வயது வரை வாழைப்பழம் கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தாலும் அதை தங்கள் கையாலேயே கூழாக்கி, சிதைத்துக் கொடுக்க வேண்டும். பொதுவாக பழம் இவ்வளவு ஆபத்தானது அல்ல. இது அரிய நிகழ்வு என்றார். இனி பெற்றோர் வாழைப்பழத்தை நேரடியாக குழந்தைகள் கையில் கொடுக்காமல், அவர்களே கொடுக்க வேண்டும்" என்றார்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!