India
தெலுங்கானா : ஆபாச படங்களை காண்பித்து மிரட்டல்.. 7 மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி வார்டன்..
தெலுங்கானா மாநிலம் ஹயாத் நகர் என்ற பகுதியில் ஸ்ரீ சைதன்யா என்ற பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பல்வேறு மாணவர்கள் படித்து வரும் இந்த பள்ளியில் 150 மாணவர்கள் கொண்ட ஹாஸ்டல் இருக்கிறது. இந்த ஹாஸ்டலின் வார்டனாக முர்ராம் கிருஷ்ணா (வயது 35) என்பவர் கடந்த மாதம் வேலையில் சேர்ந்தார்.
இவருக்கு திருமணம் ஆகாத நிலையில், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் துப்புறுத்தல் கொடுத்துள்ளார். மாணவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் அவர்களை எழுப்பி, அவர்களுக்கு ஆபாச படங்களை காண்பித்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திலும் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கிருஷ்ணாவை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!