India
12 வயது சிறுமியைக் கடத்தி சென்ற இளைஞர் - தனியாக சென்று மகளை மீட்ட தந்தை : மும்பையில் நெகிழ்ச்சி சம்பவம்!
மும்பை பாந்தரா பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 12 வயது சிறுமி அருகில் உள்ள கடைக்குச் சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் அவரை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை என்றது உடனே காவல்நிலையத்திற்குச் சென்ற பெற்றோர் சிறுமியை காணவில்லை எனப் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கியிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, அதேபகுதியில் உள்ள கார்மெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் சாஹித் கான் 24) சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது. சிறுமிக்கு சாஹித் கான்னை முன்பே தெரியும் என்பதால் சிறுமி சென்றிருக்கலாம் என போலிஸார் சந்தேகித்தனர்.
இந்நிலையில் போலிஸார் ஒருபக்கம் விசாரணையை தொடங்க, சிறுமியின் தந்தை சாஹித் கான் தங்கியிருந்த கார்மெண்டில் விசாரித்துவிட்டு, மும்பையில் இருந்து உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகர் மாவட்டத்திற்குச் சென்றார்.
அங்கே அத்ரோலி என்ற கிராமத்தில் சிறுமியை கடத்திச் சென்றதைக் கண்டுபிடித்துள்ளார். பின்னர் மும்பை போலிஸார் அளித்த முதற்கட்ட தகவலின் படி, உ.பி போலிஸார் அலிகரில் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் தப்பியோடிய சாஹித் கான்னை போலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒன்றிய விளையாட்டுத் துறையில் 21% நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
ரூ.718 கோடி முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடியது VB-G RAM G முன் வடிவு!” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
“சுய உதவிக்குழுக்களின் தயாரிப்பு பொருட்கள், இதுவரை சுமார் ரூ.690 கோடிக்கு விற்பனை!” : துணை முதலமைச்சர்!
-
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட மாடல் அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை!