India
மும்பையில் கடத்தப்பட்ட சிறுமி.. உத்தரபிரதேசத்தில் மீட்ட தந்தை.. சினிமா பாணியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் !
கடந்த 4-ம் தேதி மும்பை பகுதியில் இருந்த சிறுமி ஒருவர் தனது தந்தையிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் இது குறித்து கூலி காவல்துறையில் புகார் அளித்தார்.
பின்னர் விசாரணை மேற்கொண்டதில் சூரத் பகுதியை சேர்ந்த ஷாஹித் கான் (வயது 24) என்ற இளைஞர் ஒருவர் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறை உதவியோடு அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு ஷாஹித்தை கண்டறிந்து சிறுமியை தந்தை மீட்டார். மேலும் ஷாஹித் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, அவர் சிறுமி வீட்டிற்கு அருகே வேலை பார்த்து வந்துள்ளார். சிறுமி தனியே வருவதை கண்ட ஷாஹித் அவரிடம் கடைக்கு கூட்டி செல்லுமாறு கேட்டுள்ளார். சிறுமியும் கூட்டி சென்றுள்ளார். ஆனால் அதற்குப் பதிலாக அவரை குர்லா என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதற்காக முதலில் அவரை சூரத்திற்கு பேருந்தில் அழைத்து சென்ற அவர், அங்கிருந்து இரயிலில் சிறுமியை டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளது தெரியவந்தது. மேலும் அவர் சிறுமியை பேருந்தில் கூட்டி செல்லும்போது குடிபோதையில் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஷாஹித் கான் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!