India
"ரூ.10,000-க்கு அந்த போன் கிடைக்க வாய்ப்பே இல்லை.." -Xiaomi-யின் இந்திய தலைவர் தகவல் !
இந்தியாவின் பிரபல முன்னணி மொபைல் கம்பெனிகளில் ஒன்றாக திகழ்கிறது Xiaomi நிறுவனம். ஏற்கனவே இந்த நிறுவனம் 5G மொபைல் பொங்கலை இந்திய சந்தையில் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது தொலைத்தொடர்பு நிறுவங்களான ஜியோ, ஏர்டெல் உள்ளிட்டவை இன்னும் சில மாதங்களில் தங்களது 5ஜி சேவையை தொடங்கவுள்ளது.
அதிலும் ஜியோ நிறுவனம் வரும் தீபாவளி அன்று சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் முதற்கட்டமாக தங்களது 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சியோமி நிறுவனம் தங்களது 5ஜி மொபைல் போனை நுகர்வோர் வாங்கும்விதமாக சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பேசிய சியோமி இந்திய தலைவர் முரளிகிருஷ்ணன், "பண்டிகை காலம் துவங்கும்போது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் உள்ளிட்ட விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களின் வரவு அதிகரிக்கத் துவங்கும். நாங்களும் எங்களது பண்டிகை விற்பனைக்கு தயாராகி வருகிறோம். பல்வேறு வகையான போன்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகளும் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
பொருளாதார அளவைப் பொறுத்து மலிவு விலையில் 5G போன்களை சியோமி வெளியிடும். இந்தாண்டு இறுதியில் சிப்செட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கிறோம். எனவே 10,000-க்குள் 5ஜி ஸ்மோர்ட் போன்களை வெளியிடச் சிறிது காலம் எடுக்கும்." என்று தெரிவித்தார்.
இந்த நிறுவனம் ஏற்கனவே 13,999-க்கு Redmi 11 Prime 5G, Redmi 11 Prime (4G) and Redmi A1 உள்ளிட்ட மொபைல் போன்களை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னதாக Realme போன்ற பிராண்டுகள் 10,000 ரூபாய் பிரிவின் கீழ் 5G போன்களை விரைவில் வெளியிடுவதாக தெரிவித்துள்ள நிலையில், சியோமி நிறுவனம் மலிவு விலையில் 5G போன்களை தற்போது விற்க இயலாது என்று கூறியுள்ளது.
Also Read
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"டீசல் பேருந்துகளின் பயன்பாடு குறைக்கப்படாது" : அமைச்சர் சிவசங்கர் உறுதி!
-
”ஒன்றிய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக மாறும் தேர்தல் ஆணையம்” : முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்!