India

இனி கடன் செயலிகளின் தொல்லை கிடையாது.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு என்ன ?

இந்திய முழுவதும் கடன் செயலிகளின் சட்ட விரோத செயல்களால் பலர் பாதிக்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன. மேலும், கடன் செயலிகளின் முகவர்கள் மிரட்டலால் தற்கொலைகளும் பதிவாகின. இது குறித்த புகார்கள் தொடர்ந்த நிலையில், இத்தகைய செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ரிசர்வ் வங்கி முன் வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு ஒன்றிய அரசு துறைகளை சேர்த்த அதிகாரிகள் பங்குபெற்ற உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் பல அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

அதன் படி ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும் கடன் செயலிகள் மட்டுமே இனி ஆப் ஸ்டோரில் இடம் பெற அனுமதிக்கப்படும் என்றும், இதற்கான நடவடிக்கையை ஒன்றிய தகவல் தொடர்பு துறை அமைச்சகம் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய கடன் செயலிகளை இயக்குபவர்கள் பயன்படுத்தும் பினாமி வாங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும், இத்தகைய செயல்களுக்கு பின்னால் இருப்பவர்கள் பயன்படுத்தும் போலி நிறுவனங்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து இனி கடன் செயலிகள் முறையாக கண்காணிக்கப்படும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Also Read: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை.. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளருக்கு 704 நாட்களுக்கு பிறகு ஜாமீன் !