India
LIFT-ல் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது முதியவர்.. குஜராத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி !
குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியிலுள்ள சந்த்கேடா குடியிருப்பு வளாகத்தில் 9 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமி வெளியில் சென்று விட்டு 11 வது மாடியில் இருக்கும் தனது வீட்டிற்கு லிப்டில் சென்றார்.
அப்போது ஏற்கனவே லிப்டில் ஜகத்பூரைச் சேர்ந்த 62 வயதுடைய பானுபிரதாப் ராணா என்ற முதியவர் இருந்துள்ளார். அந்த சமயத்தில் லிப்டில் சிறுமி ஏறியதை கண்ட முதியவர் சிறுமி என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். பின்னர் லிப்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது முதியவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது உறுதியானது. இதனைத்தொடர்ந்து முதியவர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.
பின்னர் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை போக்ஸோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக வெவ்வேறு மாநிலங்களில் இது போன்று லிப்டில் சென்ற போது ஒரு நபர் வைத்திருந்த நாய் மற்றொரு நபரை கடித்தது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது லிப்டில் முதியவர் ஒருவர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!