India
டாடா சன்ஸ் சைரஸ் மிஸ்த்ரி மரணம்.. விபத்துக்கு காரணம் மேம்பாலமா? விசாரணை ஆணையம் கூறுவது என்ன ?
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி. இவர் குஜராத்தில் உள்ள உத்வாதா கோயிலுக்கு சென்று விட்டு காரில் திருப்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவருடன் காரில் பயணம் செய்த நண்பர்கள் ஜஹாங்கீரி, டாரியஸ் அவரது மனை டாக்டர் அனகிதா ஆகியோரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில், சைரஸ் மிஸ்த்ரி சென்ற கார் சாலையில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் இந்த விபத்திற்கு அதிவேகமாகக் காரை ஓட்டிவந்ததே காரணம் என்று கூறப்பட்டது.
அதேபோல் காரில் பயணம் செய்தபோது சைரஸ் மிஸ்த்ரி சீட் பெல்ட் அணியாமல் இருந்துள்ளார். இதனால் கார் தடுப்பில் வேகமாக மோதும் போது அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதும், காரை டாரியஸ் மனைவி அனகிதா ஓட்டிவந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும்,இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா காவல் துறையும் போக்குவரத்துக் கழகமும் ஏழு பேர் கொண்ட தடயவியல் குழுவை அமைத்தது. அந்த குழுவின் விஸ்ராயில் இந்த விபத்துக்கு அந்த மேம்பாலத்தின் தவறான வடிவமைப்பே முக்கியக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்த அறிக்கையில், "மேம்பாலத்தின் நடுவே இருக்கும் தடுப்புச் சுவர் சாலையில் துருத்திக் கொண்டிருக்கிறது. இது தவறான வடிவமைப்பு ஆகும். அதேபோல், விபத்து நிகழ்வதற்கு சற்று தொலைவில், மூன்று வழிச் சாலை திடீரென்று இரண்டு வழிச் சாலையாக மாறுகிறது. இதுபோன்ற தவறுகள் விபத்துக்கு முக்கிய காரணம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
-
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை! : சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?
-
விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்!