India
"சமோசா கடையில் கிண்ணம்-ஸ்பூன் இல்ல".. மத்திய பிரதேச முதல்வர் Helpline-ல் புகார் கொடுத்த நபர்!
மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங் சௌஹான் உள்ளார். இம்மாநிலத்தில் பொதுமக்கள் தங்களின் புகார்களை எளிதாகத் தெரிவிக்கும் விதமாக முதலமைச்சரின் ஹெல்ப் லைன் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களின் கோரிக்கைகள் மட்டும் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமோச கடை மீது ஒருவர் புகார் அளித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அந்த புகாரில், "சதர்பூர் பேருந்து நிலையத்தில் ராகேஷ் என்ற பெயரில் சமோசா கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் சமோசாவுக்கு ஸ்பூன், தட்டுகள் வழங்குவதில்லை. எனவே இந்த பிரச்சனையைத் தீர்த்து வைக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
இதையடுத்து இந்த புகாரை ஏற்றுக்கொண்டு, புகார் அளித்த நபரிடம் பேசி 5 நாட்களுக்குப் பிறகு இந்த வழக்கு முடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பெண்கள் பாதுகாப்பு குறித்த எடப்பாடியின் அற்பத்தனம் அம்பலமானது : ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
-
ஒரு குடும்பச் சண்டைக்கு அறிக்கை விட்ட பழனிசாமி : கோவை விவகாரத்தில் திமுக IT WING பதிலடி!
-
‘அறிவுத் திருவிழா’ - இளைஞர்களுக்கு திராவிட கொள்கை உரம் ஊட்டும் உதயநிதி : முரசொலி புகழாரம்!
-
சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் : இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
-
”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!