India
தனியார் நிறுவனத்தில் கொள்ளை.. தப்பிக்க தாக்குதல் நடத்திய கும்பல்.. போலிஸ் என்வுன்டரில் ஒருவர் பலி !
ஜார்கண்ட் மாநிலம் தன்பாட் என்னும் நகரில் உள்ள குருத்துவார் அருகேயுள்ள மட்குரியா சாலையில் முத்தூட் ஃபைனான்ஸ் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு இன்று ஐந்து ஆயுதமேந்திய கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளை முயற்சி குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து அந்த பகுதிக்கு போலிஸார் விரைந்து வந்துள்ளனர். பின்னர் கொள்ளையர்களை நோக்கி போலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அப்போது, கொள்ளையர்கள் போலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கியால் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு கொள்ளையர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இரண்டு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இரண்டு கொள்ளையர்கள் தப்பியதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்களுக்கு முன்பு ஆயுதமேந்திய குற்றவாளிகள் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நிலையில் இந்த என்கவுண்டர் சம்பவம் நடந்துள்ளது.
அந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களே இந்த சம்பவத்தையும் செய்தனரா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தப்பியோடிய கொள்ளையர்களை அருகில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கடைகளில் போலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் ஒரு பொலிஸுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!