India
காணாமல் போன பூனை.. கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம்: நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!
முதியவர்கள் யாராவது காணாமல்போனால் அலட்சியமாக இருக்கும் இந்த காலத்தில் காணாமல் போன வளர்ப்பு பூனையைக் கண்டு பிடிக்க நகரம் முழுவதும் டீ வியாபாரி ஒருவர் போஸ்டர் ஒட்டி தேடிவருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
புதுச்சேரி காந்திநகர் வேளாண் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமன். டீ வியாபாரியான அவர் "குட்டூ" எனற பூனையை வளர்த்துவந்துள்ளார். இந்த பூனை கடந்த 3ம் தேதியிலிருந்து காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவரால் பூனையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் அவர் மிகுந்த மனவேதனையடைந்துள்ளார்.
இதையடுத்து பூனையின் புகைப்படத்துடன் போஸ்டர் ஒன்று நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் தனது பூனை 3 ம் தேதி முதல் காணவில்லை என்றும், இதுகுறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது தொலைப்பேசி எண்ணையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கூறிய ராமன், "சென்னையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குட்டியாக இருந்த இந்தப் பூனையைத் தனது மகள் புதுச்சேரிக்கு கொண்டு வந்து வளர்த்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளாய் வீட்டிற்குள்ளே தான் பூனை இருக்கும். கடந்த 3ம் தேதி முதல் காணவில்லை. பூனையைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குச் சன்மானம் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!