India
வீட்டு செலவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம்.. மனைவியை கொலை செய்த கோடூர கணவர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி !
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியை அடுத்து நாலசோப்ராவை சேர்ந்தவர் பாவிக் ரமேஷ்பாய் - முன்னி தம்பதியினர். இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. திருமணமானது முதல் இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் இருவருக்குமிடையே மனஸ்தாபம் இருந்துள்ளது. இருப்பினும் வீட்டிற்கு பொருட்கள் வாங்க வேண்டுமென்று மனைவி, தனது கணவரிடம் காசு கேட்டுள்ளார். அதற்கு அவரோ தர முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவியை கணவர் தாக்கியுள்ளார். இதில் வலி தாங்க முடியாது மனைவி, கணவரை வசைபாடியுள்ளார்.
மனைவியின் சண்டையை பொறுக்க முடியாத கணவன், அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சு திணறிய மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இது குறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவலளிக்கவே விரைந்து வந்த அவர்கள், இறந்து கிடந்த மனைவியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
பின்னர் கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். பொருட்கள் வாங்க பணம் கேட்ட மனைவியை கணவர் கழுத்தை நெரித்து கொன்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !