India
கர்நாடகா : காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி.. வலிப்பு வந்து இறந்ததாக நாடகமாடியது அம்பலம் !
கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள கோனனகுன்டே பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சில்பா என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணமானது. ஆனால் சில்பா ஏற்கனவே சந்தோஷ் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே வேறு வழியில்லாமல் பெற்றோர் கட்டயத்தின் பேரில் மகேஷை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்த பின்பு சில்பா சந்தோஷை காதலித்து வந்ததால், அவருக்கு மகேஷுடன் வாழ விருப்பமில்லை. எனவே காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல திட்டமிட்டுள்ளார் சில்பா. அதன்படி கடந்த 2-ம் தேதி, கணவரை காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, வலிப்பு வந்து இறந்ததாக நாடகமாடியுள்ளார்.
இதையடுத்து இது குறித்து காவல்துறைக்கு பெற்றோர்கள் அளித்த தகவலின் பேரில், மகேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். அப்போது அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து குடும்பத்தாரிடம் நடத்திய விசாரணையில் மனைவி சில்பா மீது காவல்துறைக்கு சந்தேகம் வலுத்தது.
எனவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தனது குற்றத்தை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீதும், காதலன் சந்தோஷ் மீதும் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் அவர்களை சிறையில் அடைத்தனர். கணவனை காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!