India

TOLLGATE தடுப்பை உடைத்துக்கொண்டு சென்ற டிராக்டர்கள்.. உ.பியில் தொடரும் மணல் மாஃபியா கும்பலின் அட்டகாசம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா குவாலியர் நெடுஞ்சாலையில் ஜஜாவ் எனும் இடத்தில சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளார். இந்த சுங்கச்சாவடியில் வழக்கம் போல வண்டிகள் சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென அந்த பகுதியில் ஒரு டிராக்டர் ஒன்று வந்துள்ளது.

சுங்கசாவடி ஊழியர்கள் அந்த டிராக்டர் தடுப்பில் நிற்கும் என்று எதிர்பார்த்தநிலையில், தடுப்பை உடைத்துக்கொண்டு சுங்கவரி கட்டணத்தைச் செலுத்தாமல், அங்கிருந்து சென்றிருக்கிறது. அதைத்தொடர்ந்து 1 நிமிடத்தில் மேலும் 12 டிராக்டர்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சுங்கசாவடி ஊழியர்கள் இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் போலிஸார் நடத்திய விசாரணையில் அந்த 13 டிராக்டர்களும் சட்டவிரோதமாக மண் ஏற்றிச்சென்றதும், இதன் பின்னால் மணல் மாஃபியா கும்பல் இருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் கடத்தல் டிராக்டர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டிராக்டர்கள் தடுப்பை உடைத்துக்கொண்டு சுங்கவரி கட்டணத்தைச் செலுத்தாமல், அங்கிருந்து செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 'புதுமைப் பெண் திட்டம்' : பெண்களுக்கு ரூ.1000 வழங்குவது மூலம் என்னென்ன பயன்கள் ? - முதலமைச்சர் விளக்கம் !