India
திருமண மண்டபத்தில் பற்றிய தீ.. குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பரிதாப பலி.. இரவில் நேர்ந்த சோகம் !
உத்தர பிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியில் 3 மாடி கட்டிடம் கொண்ட திருமண மந்தம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் அந்த மண்டபத்தில் உள்ள ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றிக்கொண்டது.
ஒரு இடத்தில் பற்றிய தீ, அப்படியே மண்டபம் முழுக்க வேகமாக பரவ, முழுவதும் பற்றிக்கொண்டது. இதனால் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த விருந்தினர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். பின்னர் இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே தீ வேகமாக பரவியதால் மண்டபத்தில் இருந்த 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ பற்றியதை குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!