India
நீர்வீழ்ச்சியில் மனைவியை நிர்வாணமாக குளிக்க வற்புறுத்திய கணவன்.. போலி சாமியார் பேச்சால் நடந்த கொடூரம்!
மகாராஷ்டிரா மாநிலம், புனேவை சேர்ந்த பெண்ணுக்கு 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரது கணவர் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் கணவரும் அவரது குடும்பத்தினரும் ஆண் குழந்தை பிறக்க வேண்டி சாமியார்களைச் சந்தித்து வந்துள்ளனர்.
அவர்கள் கூறியதைக் கேட்டு அந்த பெண்ணை பல சடங்குகள் செய்ய வலியுறுத்தி கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அவரது கணவர் கோலாப்பூரைச் சேர்ந்த ஒரு சாமியாரைச் சந்தித்துள்ளார்.
அப்போது அவர் ஆண்குழந்தை வேண்டும் என்றால் நீர் வீழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக மனைவியை குளிக்கச் சொல் என கூறியுள்ளார். இதையடுத்து அவரது கணவரும், மாமியார் மற்றும் குடும்பத்தினர் அந்த பெண்ணை ராய்காட் மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பிறகு அவர் நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர், சாமியார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!