India
போலிஸ் உடையில் ஆபாசம்.. 2 வருடத்துக்கு பின்னர் வெளியான வீடியோ.. வசமாக சிக்கிய தலைமை காவலர் !
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் அமைந்துள்ள பங்கர்மாவ் கோட்வாலி காவல்நிலையத்தில் தீப் சிங் என்பவர் தலைமை கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவர் காவல்நிலைய உடையில் ஒரு பெண்ணுடன் ஆபாசமான செயலில் ஈடுபடும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது.
ஒன்பது வினாடிகள் கொண்ட வீடியோ அந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர்.
தீப் சிங்கிடம் விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள் விசாரணை முடியும் வரை அவரை பணி இடைநீக்கம் செய்தனர். மேலும் அவர்மேல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியான தகவலின்படி அந்த வீடியோ சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது என்றும், மறைமுக கேமரா மூலம் அந்த பெண்ணே இந்த செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. காவல்துறை தரப்பில் அந்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுவருவதாக போலிஸார் ஒருவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ காவல்துறை தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காவல்நிலையத்தில் பணியாற்றும் பிற காவலர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்பி தினேஷ் திரிபாதி கூறியுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!