India
டெல்லியில் மீண்டும் போராட்டம் தொடக்கம்..மோடி அரசை கண்டித்து தலைநகரின் திரண்ட விவசாயிகள் !
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டதை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2020ம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இந்தியாவை ஸ்தம்பிக்க வைத்தது.
தொடர் போராட்டங்களின் விளைவாக ஒன்றிய அரசு பணிந்து வேளாண் சட்டதை திரும்பப் பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இந்த போராட்டத்துக்கு வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சாதான் அழைப்பு விடுத்திருந்தது.
இதை ஏற்று டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதலே ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுத்தனர்.
இந்த நிலையில், இங்கு காலை முதலே டெல்லி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் போலிஸார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
எனினும் விவசாயிகள் அறிவித்தபடி போராட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. தலைநகர் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : பழனிசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!
-
“சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் உருவாக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!