India
திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு.. இமாச்சல பிரதேசத்தில் ஒரேநாளில் 22 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி !
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு அங்கு திடீரென கனமழை பெய்தது. குறைந்த நேரத்தில் அதிக கனமழை பெய்ததால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. திடீர் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதில் மண்டியாவில் உள்ள ஒரு இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். இங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மேலும் 5 பேர் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதுபோல காங்க்ரா, ஹமீர்பூர் மாவட்டங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 5 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் பெரும்பாலான சாலைகள் கடுமையாக சேதம் அடைந்திருப்பதால் மீட்பு பணியில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மாநிலம் முழுக்க மீட்டுப்படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு இன்னும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரே நாளில் ஏற்பட்ட மேகவெடிப்பால் மாநிலத்தில் 22 பேர் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!