India
இடிந்து விழுந்த 90 ஆண்டு பழமையான ரயில்வே பாலம்.. மேகவெடிப்பால் நேர்ந்த சோகம்.. வெளியான வீடியோ !
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அங்கு நேற்று முன் தினம் இரவு அங்கு திடீரென கனமழை பெய்தது. குறைந்த நேரத்தில் அதிக கனமழை பெய்ததால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. திடீர் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.இதில் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி ஒரே நாளில் மாநிலத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
இந்த வெள்ளத்தில் அங்குள்ள 90 ஆண்டுகள் பழமையான பாலம் இடிந்து விழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கங்கரா மாவட்டத்தில் உள்ள சக்கி ஆற்றின் குறுக்கே 800 மீட்டர் நீளமான ரயில்வே பாலம் அமைந்துள்ளது.
இந்த பலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பாலம் பதான்கோட், ஜோஹிந்தர் நகர் பகுதியை இணைப்பதாக அமைந்துள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக சக்கி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த பழமையான பாலம் இடிந்து விழுந்துள்ளது.
பாலம் உடைந்துவிட்ட நிலையில் இந்தப் பகுதிக்கு இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் கடந்த மாதம் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுக்காததால் இந்த நிலை ஏற்பட்டது என விமர்சனம் எழுந்துள்ளது. தற்போது இந்த பாலம் இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?