India
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்.. அடுத்தடுத்த வீடுகளில் அழுகி கிடந்த சடலங்கள் : பகீர் சம்பவம்!
ஜம்முவின் புறநகர் பகுதியில் உள்ளது தாவி விஹாரி். இங்கு இரண்டு வீடுகளில் இருந்து துர்நாற்றம் அடித்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இது போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலிஸார் ஆய்வு செய்தனர்.
அப்போது, முதலில் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது அழுகிய நிலையில் 4 சடலங்கள் இருந்தை போலிஸார் கண்டுள்ளனர். பிறகு அருகே இருந்த வீட்டின் கதவையும் உடைத்து உள்ளே சென்றபோது அங்கு இரண்டு சடலங்கள் இருந்துள்ளன. இதையடுத்து இந்த 6 உடல்களையும் மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இறந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தியதில் சகினா பேகம், அவரது மகள் நசீமா அக்தர், ருபீனா பானோ, மகன் சாஃபர் சலிம், உறவினர்கள் நூர் உல் ஹபீப் மற்றும் சஜாத் அகமத் ஆகியோர் என்று தெரியவந்துள்ளது.
இவர்கள் 6 பேர் மர்ம மரணம் குறித்து போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது யாராவது கொலை செய்துள்ளனரா என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
Also Read
-
நலம் காக்கும் ஸ்டாலின்: அரசு நடத்தும் 10 சிறப்பு போட்டிகள்.. எப்போது? யார் யார் பங்கேற்கலாம்? - விவரம்!
-
KGF நடிகர் திடீர் மரணம் : சக நடிகர்கள் இரங்கல்!
-
”உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டே பதவி உயர்வு” : பதிவுத்துறை விளக்கம்!
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பைக் : உயிர்தப்பிய நண்பர்கள் - நடந்தது என்ன?
-
கோப்பையை வென்றும் தொடரும் சோகம்... அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வந்த RCB அணி... விவரம் உள்ளே !