India
தந்தை, 2 சகோதரர்களை கொலை செய்த மகன்.. போலிஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!
உத்தர பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரிஜ்பால். இவரது மனைவி சசிபிரபா. இந்த மூத்த தம்பதிக்கு அமர், லக்ஷ் என்ற இரண்டு மகன்களும், ஜோதி, அனுராதா என இரண்டு மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் அமர் தனது தந்தையிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும் படி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் சொத்தை பிரிக்க முடியாது என அவர் கூறிவந்துள்ளார். இதையடுத்து உனக்குச் சொத்தில் பங்கு இல்லை என மகனிடம் பிரிஜ்பால் கூறியுள்ளார்.
மேலும் சொத்து பத்திரத்திலிருந்து அமரின் பெயரையும் பிரிஜ்பால் எடுத்துள்ளார். இதனால் அமர் தந்தை மீது கடும் கோபத்திலிருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்த தந்தை மற்றும் 2 சகோதரர்களையும் அமர் கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த கொடூர கொலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சசிபிரபா இது குறித்து காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். பிறகு அங்கு வந்த போலிஸார் 3 பேரின் சடலத்தையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள அமரை போலிஸார் தீவிரமா தேடி வருகின்றனர்.
Also Read
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?