India
மெட்ரோ ரயிலின் முன் விழுந்த முதியவர்.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்.. ஹரியானாவில் நடந்த துயர சம்பவம் !
ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் துரோனாச்சாரியா மெட்ரோ நிலையம் அமைந்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் வந்துகொண்டிருந்தபோது திடீர் என்று ஒரு முதியவர் அதன் முன் குதித்தார்.
இதில் ரயில் அவர் மேல் ஏறியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் கண்ட சக பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் முதியவரின் சாலத்தை அப்புறப்படுத்தினர்.
அப்போது அவரது பாக்கெட்டில் கடிதம் ஒன்று இருந்தது தெரியவந்தது. அதை எடுத்து படித்தபோது தான் தற்கொலை செய்துகொள்ள விரும்புவதாகவும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்றும் அந்த முதியவர் எழுதிவைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரிடம் இருந்த ஐடி கார்டை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் பெயர் ராம் நாராயண் (வயது 70) என்பதும், அவரின் சொந்த ஊர் கான்பூர் என்பதையும் கண்டுபிடித்தனர். மேலும் அவர் குதற்போது ருகிராமில் வாடகைக்கு குடியிருந்து வருவதும், அவரது ஒரே மகன் வெளிநாட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
மகன் வெளிநாட்டில் வசித்து வந்ததால் ஏற்பட்ட மனவருத்தத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலிஸார் கூறியுள்ளனர்
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!