India

கிளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. காவல்நிலையத்தில் புகார் கொடுத்த 72 வயது முதியவர்: காரணம் என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஷிவாஜி நபர் பகுதியைச் சேர்ந்தவர் 72 வயது முதியவர் சுரேஷ் ஷிண்டே. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அக்பர் அம்ஜத் கான். இவர் தனது வீட்டில் கிளி ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், முதியவர் சுரேஷ் ஷிண்டே அந்த கிளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்த புகாரில் கிளி தொடர்ந்து கத்துவதாலும், அலறுவதாலும் தனக்குத் தொந்தரவாக இருக்கிறது எனவே அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து முதியவர், "கிளியின் அலறல் சத்தம் தனக்குத் தொந்தரவாக உள்ளது என அக்பர் அம்ஜத்கானுக்கு கூறியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கிளி மீதும் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்" என கூறியுள்ளார்.

இதையடுத்து சட்டவிதிகள் படி கிளியின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். கிளி மீது காவல்நிலையத்தில் 72 வயது முதியவர் புகார் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: பக்தியின் உச்சக்கட்டம் : கோயில் கூட்ட நேரிசலில் சிக்கி 3 பேர் பரிதாப பலி.. அதிகாலையிலே அரங்கேறிய சோகம் !