India
சாலையில் சென்றபோது திடீரென வெடித்த பேட்டரி.. பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: உடல் கருகி வியாபாரி பலி!
புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம் பாக்கம் மாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். நெல் வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த 31ம் தேதி இரவு தவளகுப்பத்தை அடுத்த அபிஷேகப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவரது வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதனைச் சற்றும் எதிர்பாராத வேணுகோபால் மீதும் தீ பிடித்துள்ளது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
இதில், வேணுகோபால் நெல் வியாபாரம் செய்வதால் அடிக்கடி பணத்தை இருசச்கர வாகனத்தில் எடுத்துச் செல்வது வழக்கம். இரவு நேரத்தில் வாகனத்தில் வெளிச்சம் இருப்பதற்காக எல்.ஈ.டி விளக்குகள் பொருத்தியுள்ளார். இதற்காகக் கூடுதலாக வாகனத்தில் பேட்டரிகளை பொருத்தியுள்ளார். இந்நிலையில்தான் சம்பவத்தன்று வாகனத்திலிருந்த பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
”1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் ரூ.1000” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!