India

திடீர் அதிர்ஷ்டத்தால் கோடிஸ்வரராகிய கூலித் தொழிலாளி.. ஒரே நாளில் அனைத்தையும் இழந்த சோகம்.. நடந்தது என்ன?

உத்தர பிரதேச மாநிலம் கனோஜ் பகுதியில் வசித்து வருபவர் பிஹாரி லால். இவர் அதே பகுதியில் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்ட பிஹாரி லால் தன்னுடைய வங்கி கணக்கில் ரூ.100 எடுக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்று தன்னுடைய கார்டைப் பயன்படுத்தி நூறு ரூபாய் எடுத்திருக்கிறார். அப்போது அவரது மொபைலுக்கு பணம் எடுக்கப்பட்டதற்கான மெசேஜ் வந்துள்ளது.

அதில் அவர் எடுத்த ரூபாய் நூறு போக இன்னும் அவரது கணக்கில் ரூ.2,700 கோடி பேலன்ஸ் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. இதனால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் இது குறித்து வங்கிக்கு சென்று அங்குள்ள அலுவலர்களை அணுகி தனது வங்கிக் கணக்கின் இருப்பை பற்றி கூறியுள்ளார். அவர்கள் அதை பரிசோதனை செய்ததில், அவரது கணக்கில் ரூ.2,700 கோடி இருப்பு காட்டியுள்ளது.

3 முறை சோதனை செய்ததும் அப்படியே ரூ.2,700 கோடி இருப்பு இருப்பதாக காட்டியதால் அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் இது குறித்து வங்கி மேளாளரைச் சந்தித்து தகவல் கூறியுள்ளனர்.

அவரும் இது குறித்து சோதனை செய்ததில், பிஹாரி லாலின் கணக்கில் ரூ.126 மட்டுமே இருப்பில் காட்டியுள்ளார். இதனால் தான் பல கோடிக்கு அதிபதியாகியதாக மகிழ்ச்சியில் இருந்த பிஹாரி லால் பெரும் வருத்தமடைந்துள்ளார்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நடந்திருக்கலாம் என வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: தமிழில் அறிக்கை வெளியிட்ட ஆஸ்திரேலிய மாகாண அரசு.. உலகெங்கும் உயரும் தமிழின் பெருமை !