India
'கன்னத்தில் அறைந்து விடுவேன்'.. பா.ஜ.க கவுன்சிலரை வசைபாடிய அதே கட்சியை சேர்ந்த பெண் நகராட்சி தலைவர்!
கேரள மாநிலம், பத்தணம் திட்டம் மாவட்டத்திற்கு உட்பட்ட பந்தளம் நகராட்சியின் தலைவராக இருப்பவர் சுசீலா சந்தோஷ். இவர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் அதே பகுதியில் பா.ஜ.க கவுன்சிலராக உள்ள பிரபா என்ற இளைஞர் நகராட்சி தலைவர் சுசீலா சந்தோஷை கிண்டல் அடித்து சமூகவலைதளத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் சந்தித்துக் கொண்ட இருவரும் ஒருவரை மாறி ஒருவர் திட்டிக்கொண்டனர். அப்போது ஆவேசமடைந்த நகராட்சி தலைவி சுசீலா சந்தோஷ், நாயே எனவும் உன் கன்னத்தில் அறைந்து விடுவேன் என கடுமையான சொற்களைப் பயன்படுத்தி கவுன்சிலர் பிரபாவை திட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!