India
ஓய்வு பெற்ற பெண் ஆசிரியர்.. தாய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன்: நெகிழ்ந்த கிராமம்!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரைச் சேர்ந்தவர் சுசீலா சவுகான். பெண் ஆசிரியரான இவர் கடந்த 33 ஆண்டுகளாக கேசர்புரா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த சனிக்கிழமை சுசீலா சவுகான் பணி ஓய்வு பெற்றுள்ளார். இது குறித்து அறிந்த அமெரிக்காவில் இருக்கும் அவரது மகன் யோகேஷ் சவுகான் நான்கு நாட்களுக்கு முன்பு கிராமத்திற்கு வந்துள்ளார்.
இதையடுத்து ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெரும் தனது தாய்க்கு ஏதாவது வாழ்வில் மறக்க முடியாத பரிசு கொடுக்க வேண்டும் என யோகேஷ் சவுகான் திட்டமிட்டுள்ளார். பின்னர் சனிக்கிழமையன்று ஓய்வுபெற்ற தனது தாயை ஹெலிகாப்டரில் கிராமத்திற்கு அழைத்து வந்தார்.
இதைப்பார்த்த கிராம மக்கள் அங்குக் கூடி ஆசிரியர் சுசீலா சவுகானுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இதைச்சற்றும் எதிர்பாராத அவர் இன்ப வெள்ளத்தில் மூழ்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!