India

இரயில் பெட்டியில் இருந்த ஓட்டை.. பதுங்கியிருந்த பாம்பு.. இரவு முழுக்க தூங்காமல் பயணிகள் அவதி !

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் இரயில் நேற்றைய முன்தினம் கேரளாவில் இருந்து புறப்பட்டது. இதில் ஸ்லீப்பர், ஏசி, சிங்கிள் சிட்டிங்,என்று பயணிகள் தங்கள் வசதிக்கேற்ப பெட்டிகளில் புக் செய்து பயணம் செய்வர்.

இந்த இரயில் டெல்லி வரை செல்வதால், பயணிகளில் பலரும் ஸ்லிப்பரையே விரும்புவர். அப்படி அந்த இரயிலில் பயணம் செய்ய நினைத்த நபர், S5 கோச்சில் புக் செய்திருந்தார். அப்போது அந்த பயணி, தனது இருக்கையின் அருகே தான் கொண்டு வந்த பொருட்களை பத்திரமாக வைத்துவிட்டு, தூங்குவதற்கு தயாரானார். அப்போது அவருக்கு திடீரென்று வினோதமான சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து அவர் சுத்தி சுத்தி பார்த்தபோது, அருகே ஒரு ஓட்டை இருந்ததை கண்டுபிடித்தார். அந்த ஓட்டையில் இருந்து தான் சத்தம் வருவதாக தெரிந்துகொண்டார். பின்னர் அந்த நபர் ஒரு குச்சியை எடுத்து ஓட்டையில் விட்டுள்ளார். அப்போது பதுங்கியிருந்த பாம்பு ஒன்று சீறி வெளியே வந்தது.

இந்த நபர் சக பயணிகளிடம் கூறி உதவி கேட்பதற்குள், அந்த பாம்பு முழுமையாக வெளியே வந்து பயணிகள் இருக்கும், இடத்தில் சுருண்டு படுத்துக்கொண்டது. இதனை கண்ட அந்த பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் அலறியதையடுத்து, அந்த இடத்திற்கு இரயில் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் வந்தனர். மேலும் விவரத்தை அறிந்து பாம்பை அவர்கள் தேடுவதற்குள், அந்த பாம்பு மாயமானது.

இதயடுத்து அந்த பாம்பு எங்கு தேடியும் கிடைக்காததால், அது வேறு ஓட்டை வழியாக தப்பியிருக்கும் என்று பாதுகாப்பு படை வீரர்கள் கூறினர். இருப்பினும் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பீதியில் இரவு முழுவதும் தூங்காமல் இருந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: சிறுமியை மிரட்டி 1 மாதமாக கூட்டு பாலியல் வன்கொடுமை.. கொலை குற்றவாளியின் வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் !