India
"தள்ளி நில்லுங்கள்,நீங்கள் கிட்ட வந்தால் மரம் கருகிவிடும்"-பழங்குடி மாணவிகளை கண்டித்த அறிவியல் ஆசிரியர்!
மகாராஸ்டிர மாநிலம் நாசிக் அருகே உள்ள தேவ்கௌன் என்ற ஊரில் பெண்களுக்கான ஆசிரமப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான பழங்குடியின மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் கடந்த 27 ஆம் தேதி மாணவிகளுக்கு தோட்டக்கலை வகுப்பு நடைப்பெற்றுள்ளது. அப்போது மாணவிகளிடம் செடிகள் கொடுத்து அதை ஆசிரியர் ஒருவரை நடக்கூறியுள்ளனர். அதன்படி மாணவர்களும் செடிகளை நட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், அங்கு வந்த அறிவியல் பாடம் எடுக்கும் ஆண் ஆசிரியர் ஒருவர் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் மாணவிகள் மரக்கன்றுகளை நடக்கூடாது, அவ்வாறு நட்டால் மரம் கருகிவிடும் எனக் கூறியுள்ளார். மேலும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள மாணவிகளை தள்ளி ஓரமாக நிற்கும்படியும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையிடம் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட ஆணையம் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய கூடுதல் ஆணையர் சந்தீப் கோலைட் "சிறுமியின் வகுப்பு தோழிகள் , மாணவிகள், ஆசிரியர்கள், கண்காணிப்பாளர் மற்றும் முதல்வர் உட்பட அனைவரின் வாக்குமூலங்களையும் கேட்ட பிறகு விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
அறிவியல் பலமடங்கு முன்னேறிவிட்ட நிலையில், இது போன்ற பிற்போக்கு மூட நம்பிக்கைகளை அறிவியல் ஆசிரியரே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருமணமான பெண்ணுக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை.. தவெக நிர்வாகிக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
-
கொத்தடிமை ஒப்பந்தம்: ஆத்தூர் நகராட்சியின் அராஜகத்தை வேடிக்கை பார்க்கும் தவெக அரசுக்கு DMK IT WING கண்டனம்
-
த.வெ.க அரசு என்ன டாஷ் பண்ணிட்டு... : பழனி கோயில் நிலம் குறைகேடு விவகாரம் - DMK IT WING கண்டனம்!
-
மலையடிப்பட்டி அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவலம் : ஒரே படுக்கையில் 4 நோயாளிகளுக்குச் சிகிச்சை!