India

"காந்தி கால இந்தியா இப்போது இல்லை, மதவாதம் பெருகி நாட்டை அழிக்கிறது" -நெல்சன் மண்டேலா பேத்தி வருத்தம் !

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி வெற்றிகண்டவர் நெல்சன் மண்டேலா. அவரின் பேத்தி நிடிலேகா மண்டேலா தற்போது இந்தியா குறித்து தெரிவித்துள்ள கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா குறித்து பேசியுள்ள அவர், "நிறவெறிக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் போராட்டத்தில் ஒரு காலத்தில் குறிப்பிடத்தக்க பங்கை இந்தியா வகித்தது.

மகாத்மா காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற மாபெரும் தலைவர்களுக்குப் பின்னால், எந்த இனத்தையும், மதத்தையும் சிறப்புரிமை பெற மறுக்கும் ஒரு முன்மாதிரியை இந்தியா முன்வைத்தது. நிறம், மதம் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் சமமான மரியாதையை போதித்தார்கள்.

இது போன்ற சம்பவங்களால் உலகை மிகவும் கண்ணியமாகவும் ஜனநாயகமாகவும் மாற்ற போராடிய மண்டேலா போன்ற மனிதர்களுக்கு இந்தியா உத்வேகம் அளித்தது. நெல்சன் மண்டேலா, இந்திய சுதந்திர போராட்டத்தை வைத்து தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எப்படி முடிவுக்கு கொண்டு வரலாம் என பேசியுள்ளார்.

ஆனால், அந்த இந்தியா இப்போது இல்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இருந்த இந்தியாவின் ஜனநாயகத்தை இஸ்லாமோபோபியா அரித்து வருகிறது. தேசிய அளவில் இஸ்லாமியர்கள் அதிக பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இஸ்லாமோபோபியாவை ஊக்குவிப்பதன் மூலம், மத பிளவுகளை சரி செய்வதற்கான வாய்ப்புகளை இந்தியா இழக்கிறது.

இது வரும் காலங்களில், அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னை ஏற்படும் போது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். இவை எல்லாவற்றையும் கடந்து மக்களை நகர்த்தி செல்ல சரியான தலைவர் தேவை" என்று கூறியுள்ளார்.

Also Read: ‘என்னங்க இப்படி பண்ணி இருக்கீங்க’:Chess Olympiad ஏற்பாடுகள் குறித்து Spain Grand Master ட்விட்டர் பதிவு !