India

விடுமுறையில் பேருந்து ஓட்டும் 21 வயது இளம் பெண்! - காரணத்தை கேட்டு அதிர்ந்த இணையவாசிகள்!

கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த பி.ஜி.அன்சாலன் - பாலக்காடு மாவட்ட கூடுதல் நீதிபதி ஸ்மிதி ஜார்ஜ் தம்பதிக்கு ஆன் மேரி அன்சாலன் என்ற மகள் உள்ளார். (வயது 21). எர்ணாகுளம் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் இவர் வாகனம் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவராக உள்ளார்.

தனது 15 வயதில் தனது தந்தையின் அதி கணம் கொண்ட ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டி, அந்த பகுதியில் வெகுவாக வலம் வந்திருக்கிறார். தற்போது 21 வயதுடைய இவர், இருசக்கர, மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று அனைத்து வாகனத்தையும் ஓட்ட வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

அந்த வகையில், அண்மையில் பேருந்தை ஓட்டி சந்தித்துள்ளார். இந்த பேருந்தை தனது அண்டைவீட்டு பேருந்து ஓட்டுநர் ஒருவரிடம் கற்றுக்கொண்டிருக்கிறார். அவரிடம் கற்றுக்கொண்ட வித்தைகள் வீணாக போகாமல் இருக்க, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை, சம்பளம் எதுவும் பெறாமல், இலவசமாக ஒரு தனியார் பேருந்தை இயக்கி வருகிறார்.

இதற்காக இவரது பெற்றோர்கள், குடும்பத்தினர் இவரை வெகுவாக ஊக்குவிக்கின்றனர். தற்போது பைக், கார், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனத்தை ஓட்டும் இவர், விரைவில் அதிக கணம் கொண்ட வண்டியை ஓட்டுவதற்கு திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். அதன்படி தனது 22-வது பிறந்தநாளிற்குள் JCB-ஐ ஓட்டும் எண்ணம் கொண்டுள்ளார்.

இது குறித்து மாணவி கூறும்போது, பேருந்தை தான் இயக்கும்போதெல்லாம் ஒரு பெண் தங்களை முந்தி செல்வதாக எண்ணி, பல ஓட்டுநர்கள் தன்னிடம் சண்டை போட்டுள்ளதாகவும், இருப்பினும் தான் அசரவில்லை என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

21 வயது இளம்பெண் ஒருவர், அதிக எடை கொண்ட வாகனத்தை தனியே ஓட்டி சாதனை படைத்தது வருவது அவரது பெற்றோர்களுக்கும், அந்த ஊர் மக்களுக்கும் பெருமை சேர்க்கிறது. மேலும் ஆன் மேரியை அந்த ஊர் மக்கள் அனைவரும் ஊக்குவிக்கும் வகையில் பாராட்டி வருகின்றனர்.

Also Read: "தாய்மை தடையில்லை!" - நிறைமாத கர்ப்பிணியாக களத்தில் இறங்கும் Grand Master - யார் இந்த ஹரிகா துரோணவல்லி ?