India

விவசாய நிலத்தில் விழுந்து சுக்குநூறாக உடைந்த சிறிய விமானம்.. பதறியடித்து ஓடிவந்த கிராம மக்கள்!

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்திற்குட்பட்ட கட்பன்வாடி கிராமத்தில் இன்று காலை வானில் பறந்து கொண்டிருந்த சிறிய விமானம் ஒன்று திடீரென விவசாய நிலத்தில் விழுந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் பதறியடித்து அங்கு வந்து பார்த்தபோது சிறிய விமானம் உடைந்திருந்தது. மேலும் அதன் உள்ளே பெண் விமானி காயத்துடன் இருந்துள்ளார். அவரை உடனே பொதுமக்கள் மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் விசாரணை செய்தபோது விவசாய நிலத்தில் தரையிறங்கியது பயிற்சி விமானம் என்று தெரியவந்தது. மேலும் 22 வயது பெண் பவிகா ரத்தோட் விமானத்தை இயக்கி வந்ததும் தெரிந்தது.

அதேபோல், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. பிரச்சனையை உடனே அறிந்து விவசாய நிலத்தில் விமானத்தைத் தரையிறக்கியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் விமானி பவிகா ரத்தோட் அச்சமில்லாமல் இந்த செயலை செய்துள்ளார் என உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். இந்த விபத்து குறித்து போலிஸார் மற்றும் விமான உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட வருகின்றனர்.

Also Read: மாம்பழம் கேட்டு அழுத 5 வயது சிறுமி.. கழுத்தை அறுத்து கொலை செய்த சித்தப்பா.. உ.பி-யில் கொடூரம் !