India
ஆர்டர் மாத்திக் கொடுத்ததால் ஆத்திரம்.. வெயிட்டரைக் குத்தி கொலை செய்த இளைஞர் : மும்பையில் நடந்த கொடூரம்!
மும்பை அந்தேரி பகுதியில் 3 நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் ஜெகதீஷ் ஜலால் (42) என்பவர் வெயிட்டராக பணியாற்றுகிறார். அதேஹோட்டலில் உள்ள சமையல்காரராக 27 வயதான இளைஞர் மாதவ் மண்டலும் ஒன்றியாக பணியாற்றியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் கருத்துவேறு இருந்த நிலையில் அடிக்கடி வாய்தகராறு நடந்துள்ளது. இதனிடையே நேற்றைய தினம் இரவு, வாடிக்கையாளர் கொடுத்த ஆர்டரை மாற்றிக்கொடுக்கும் படி, ஜெகதீஷ் கேட்டு சமையல்க்காரர் மாதவ்விடம் கேட்டுள்ளார்.
ஆனால் ஆர்டர் மாற்றிக்கொடுத்ததால் இருவருக்கும் அப்போதே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்து அவரவர் அறைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கோபம் அடங்காத நிலையில், இன்று காலை 8 மணிக்கு எழுந்தவுடன் மாதவ் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து ஜெகதீஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்துவிழுந்த ஜெகதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவலறிந்து வந்த போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுகாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து மாதவ் மண்டலைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் ஏற்கனவே வேலைப்பளுவில் மன அழுத்தத்தில் இருந்ததால், ஆர்டரை மாற்றியதால் கோபத்தில் இதுபோல செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். மேலும் போலிஸார் அவரை சிறையில் அடைத்து அடுத்துக்கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!