India
’ஜெய் ஸ்ரீராம்’ கோஷமிட மறுத்த இஸ்லாமிய சிறுவன் மீது தாக்குதல்.. ஹைதராபாத்தில் இந்துத்துவ கும்பல் அராஜகம்!
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இஸ்லாமிய மக்கள் மீது தொடர்ச்சியாக வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற பா.ஜ.க மாநிலங்களில் மட்டுமே அதிகம் நடந்து வந்த தாக்குதல் தற்போது கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் விரிவடைந்துள்ளது.
குறிப்பாக, இஸ்லாமியர்களிடம் அடையாள அட்டை கேட்டும், ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட கோரியும், வேண்டும் என்ற இந்துத்துவ கும்பல் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்படியான தாக்குதல் குறித்து எல்லாம் பிரதமர் மோடி பேசாமல் இருந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் ஹைதராபாத்திலும் 17 வயது இஸ்லாமியச் சிறுவனை ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட கோரி இந்துத்துவ கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் பொனாலு பண்டிகையை ஒட்டி இந்துத்துவ கும்பல் ஊர்வலம் ஒன்று நடத்தியது. அப்போது அங்கிருந்த இஸ்லாமியச் சிறுவனிடம் சென்ற அந்த கும்பல் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடுமாறு கூறியுள்ளது.
இதற்கு அச்சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அந்த கும்பல் சிறுவன் என்றும் பாராமல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சிறுவனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் அந்த கும்பலிடம் இருந்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !